பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் ரிலீஸ்; எப்போது தெரியுமா?

Web Ads

பிரதீப் நடித்துள்ள ‘டியூட் மற்றும் எல்ஐகே படங்களின் தகவல்கள் காண்போம்..

‘டிராகன்’ படத்துக்குப் பிறகு ‘டியூட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு ஜோடியாகியுள்ளார். மேலும் சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர்.

கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இதன் ‘நல்லாரு போ’ என்ற 2-வது பாடல் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

Web Ad 2

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘டியூட்’ தீபாவளிக்கு வெளியாவதால் ‘எல்ஐகே’ வெளியீடு தள்ளிப் போகிறது. எல்ஐகே படத்தின் கதைக்களம் தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

அதாவது இன்னும் 40 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகரம் எப்படி காட்சியளிக்கும் எனவும், அப்போது நிகழும் காதலை கிரியேட்டிவ் செய்திருக்கிறார் இயக்குநர் விக்கி எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

pradeep ranganathan dude to release on diwali
pradeep ranganathan dude to release on diwali