
ஆள விடுங்க பிக் பாஸை கலாய்த்து கோவா கிளம்புகிறார் பிரதீப் ஆண்டனி.
Pradeep Antony in Decision on Upcoming Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்ததை காட்டிலும் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும் இவர் நிகழ்ச்சியை கலாய்த்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் சரி ஜாலியா இருந்துச்சு இப்போ ஒரு நாலு அஞ்சு ப்ரொடியூசர் என்னை நம்பி கதை கேக்குறாங்க. நான் IFIF கோவா 2024 கிளம்புகிறேன். நாலு பாரின் படம் பார்த்து திருடி ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி படத்தோட வரேன்.ஆள விடுங்க, நீங்களாச்சு, பிக் பாஸ் ஆச்சு. போய்ட்டு வரேன் நல்லா இருங்க என பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு