பிரதீப்-அஷ்வத் கூட்டணியில் ‘டிராகன்-2’ அப்டேட்ஸ்..

‘டிராகன்’ படத்தை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஈர்த்த கதைக்களம். இப்போது இப்படி இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்…

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்பட பலர் நடித்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இரண்டாவது முறையாக மீண்டும் வருவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள பிரதீப் ரங்கநாதன், நண்பனாக இருந்து இயக்குநராக மாறுவதற்கு சிறிது நேரம் பிடித்தது என்றும் ஆனால், இப்போது இரண்டிலும் சிறந்ததை பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இரு டிராகன் படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் இதன் இரண்டாவது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். பார்க்கலாம்.!

pradeep and ashwath in dragon2 movie updates
pradeep and ashwath in dragon2 movie updates