பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் பிரதாப் போத்தன்.

1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் பிறந்தார். 1978 ஆம் ஆண்டு திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர் தற்போது வரை பல படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் பல்வேறு படங்களை இயக்கியும் உள்ளார்.

நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது 70 வயதாகும் பிரதாப் போத்தன் உடல் நல குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆற்றியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.