600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் புராஜெக்ட் கே படத்துக்கு பிரபாஸ் வாங்கும் சம்பளம் தெரிய வந்துள்ளது.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரான இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆதி புருஷ்.

ஆனால் இந்த படம் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வசூல் ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.