Pushpa 2

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், “ருத்ரா” கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை தெய்வீக மற்றும் பிரமிக்க வைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ருத்ரா என்று பெயரிடப்பட்ட பிரபாஸின் கதாபாத்திரம், அபரிமிதமான சக்தி மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் பொங்கி எழும் புயல் என வர்ணிக்கப்படுகிறது, கடந்த கால மற்றும் எதிர்கால காலங்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமானின் கட்டளையால் ஆளப்படும் இப்பாத்திரம் தெய்வீகத்தன்மை மற்றும் வலிமையின் சரியான கலவையாகத் திகழ்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாஸை மயக்கும் அவதாரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபாஸ் ஒரு மலையின் உச்சியில் நின்று, கழுத்தில் ருத்ராட்ச மணிகளால் அலங்கரிக்கப்பட்டு, கையில் தடியை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். அவரது அமைதியான வெளிப்பாடு சிவனின் பின்னணியில் வித்தியாசமாக உள்ளது. இந்த அமைதி பிரமிக்க வைக்கும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் ஒரு சித்திரத்தை மனதில் உருவாக்குகிறது. இந்த போஸ்டர் அவரது பாத்திரம் பற்றிய ஆவலைத் தூண்டுகிறது.

மோகன் பாபு, அக்‌ஷய் குமார், மோகன்லால், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன் பாபு மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Prabhas As Rudra From The Much-awaited Film Kannappa

Prabhas As Rudra From The Much-awaited Film Kannappa