Web Ads

பிக் பாஸ் முடிந்து ஒன்றரை மாதம் ஆகுது.. ஆனால்? கடுப்பில் சௌந்தர்யா போட்ட பதிவு.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Post by Soundarya after Bigg Boss
Post by Soundarya after Bigg Boss

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். சௌந்தர்யாவின் குறும்புத்தனத்திற்கென இதுவரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஆனால் சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றன. பி ஆர் வைத்து தான் சௌந்தர்யா ஓட்டுக்கள் அதிகம் வாங்கினார் என்றும் பேசப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் அவரின் மீது இந்த குற்றச்சாட்டு பல போட்டியாளர்கள் சொல்லியிருந்தனர். அப்படி விமர்சித்து வருபவர்களுக்கு சௌந்தர்யா பதிவு ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது சௌந்தர்யா பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான் வீட்டை விட்டு வெளி வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் “இன்னும்” சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள் என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.