விஜய்யை தொடர்ந்து, தனுஷ்க்கு ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே..

ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தில் ஒரே பாடலில் ஆட்டம் போட்டு கவனம் ஈர்த்தவர் ‘மோனிகா’ பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடந்து பூஜா நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்..
‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார்.
இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தினை முடித்துவிட்டு கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். இப்படத்தினை ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
விரைவில் படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. ‘அமரன்’ வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் படப்பூஜை முடிவடைந்துவிட்டது. இப்படத்தினையும் ஒரே கட்டமாக தேதிகள் கொடுத்து முடிக்க தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார்.
