Ponnambalam Says About Ajith Help
Ponnambalam Says About Ajith Help

உதவி கேட்ட அடுத்த நொடியே அஜித் செய்த செயல் குறித்து முதல் முறையாக நடிகர் பொன்னம்பலம் பேசியுள்ளார்.

Ponnambalam Says About Ajith Help : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத் திறமை கொண்டவர். நல்ல மனம் கொண்டவர்.

தல அஜித்தை பற்றி பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் அவர் நல்ல மனிதன் என்ற கருத்தையே கூறி வருகின்றனர். இவர் விளம்பரம் இல்லாமல் செய்யும் பல்வேறு உதவிகள் நடிகர்களின் மூலமாகவே வெளியே தெரிய வருகின்றன.

அந்த வகையில் நடிகர் பொன்னம்பலமும் அஜித் செய்த உதவி குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் பொன்னம்பலத்தின் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா? அவரின் அப்பாவிற்கு இத்தனை மனைவியா? – வெளியான ஷாக்கிங் தகவல்.!

அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த போது பொன்னம்பலம் தன்னுடைய நண்பரின் மகனின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக அஜித்திடம் பண உதவி கேட்டுள்ளார்.

அதன் பின்னர் அன்று மதிய உணவிற்கு அஜித் வந்தபோது ஜி மருத்துவ செலவிற்காக பணம் கேட்டேனே என கேட்டுள்ளார்.

அதற்கு தல அஜித் அட அத காலையிலேயே மருத்துவமனைக்கு அனுப்பிட்டேன் என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது உடல்நிலை குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வரும் பொன்னம்பலமும் அஜித் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அஜித்தும் கூடிய விரைவில் பொன்னம்பலத்திற்கு உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.