வலிமை படத்தின் மீது சாந்தி என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Police Complaint on Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் சாந்தி என்ற வழக்கறிஞர் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் படத்தின் மீது புகார் அளித்துள்ளார். படத்தில் வழக்கறிஞர்களை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுக்காக அனைவரையும் ஒட்டுமொத்தமாக தவறாக கூறுவது ஏற்புடையதல்ல. படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.