Police Complaint Against on Baakiyalakshmi Serial

பாக்கியலட்சுமி சீரியலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Police Complaint Against on Baakiyalakshmi Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசியான பாக்கியா சவால்களை தாண்டி எப்படி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெயிக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது திடீரென சீரியலின் கதை களம் மாறியுள்ளது. அதாவது ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக இனியாவின் தோழி தற்கொலை முயற்சி செய்து இருப்பது போலவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது அவருடைய பெற்றோர் புகார் அளிக்க முன்வராமல் இருப்பது போலவும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இவையெல்லாம் தவறான முன்னுதாரணம். எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வே இல்லை. அதுவும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது கொஞ்சம் கூட நியாயம் இல்லாத செயல். தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை கூற அரசு இலவச எண்களை அறிவித்துள்ளது. அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்திருந்தார் இது ஒரு விழிப்புணர்வாக இருந்திருக்கும்.

சென்னையில், கனமழையை கணிக்கத் தவறியது ஏன்? : ஆய்வு மையம் விளக்கம்

ஆனால் அதற்கு மாறாக சீரியலில் வீட்டில் கூட சொல்ல பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது சரியான விஷயம் அல்ல. இது பள்ளி குழந்தைகள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக இருக்கும். ஏற்கனவே சன் டிவி சீரியல் கல்யாண வீடு சீரியலில் இதுபோன்ற தவறான முன்னுதாரணம் காட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த Velan படக்குழு.! | Tamil | Mugen | Soori | Meenakshi | Kavin |HD

அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். இதனால் கல்யாண வீடு சீரியல் போல பாக்கியலட்சுமி சீரியலுக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. சீரியல் குழு இதனை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.