பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த ரகசியத்தை ஏ ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார்.

Pitchaikaran 2 Movie Director : தமிழ் சினிமாவின் நடிகர் இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். திரையரங்க வசூல் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் என இரண்டிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய புரட்சியை செய்தது.

645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு : ஸ்மிருதி இரானி தகவல்..

பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப்போவது யார்? ரகசியத்தை வெளியிடும் ஏ ஆர் முருகதாஸ்

இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் மட்டும் வெளியிடப்படாமல் இருந்தது.

இப்படியான நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவலை ஏ ஆர் முருகதாஸ் வரும் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிவிப்பார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு!