Petta Vs Sarkar Single

Petta Vs Sarkar Single : பேட்ட சிங்கிள் டிராக்கால் தளபதி ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் மீதும் பாடலாசிரியர் விவேக் மீதும் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பில் நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் சர்கார் படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்து இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தை தயாரித்துள்ளது.

பேட்ட படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் அமோக மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சிங்கிள் டிராக் பாடலை சர்கார் படத்திற்கு பாடல் எழுதி இருந்த விவேக் தான் எழுதியுள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் அவர் மீது பயங்கர கோபத்தில் உள்ளனர்.

அதற்கு காரணம் சர்கார் படத்தின் இன்ட்ரோ பாடலான சிமிட்டங்காரன் பாடலை புரியாதபடி எழுதி விட்டு பேட்ட பாடலை மட்டும் படு மாஸாக எழுதி உள்ளீர்கள். ஏன் இப்படி பண்ணிடீங்க என தளபதி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here