விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி; பரபரப்பு நிகழ்வு
பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்துள்ளார். இது குறித்த தகவல்கள்..
ஆந்திராவில் நடிகராக மட்டுமின்றி, துணை முதலமைச்சராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். அவரது நடிப்பில் கடைசியாக ‘ப்ரோ’ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘சாஹோ’ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கியிருக்கிறார். ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.
ஓஜி படம் தவிர்த்து ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் உள்ளிட்ட படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார். பவன் கல்யாணுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் நான்காவதாக பிறந்தவர் மார்க் ஷங்கர். சிங்கப்பூரில் படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் பவனின் மகன் படிக்கும் பள்ளியில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த விபத்தில் மார்க்கும் சிக்கியிருக்கிறார். அவருக்கு கைகள் மற்றும் கால்களில் தீ காயங்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு பவன் கல்யாணுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விரைவில் அவர் சிங்கப்பூர் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மார்க் ஷங்கர் பூரண நலம் பெற வேண்டும் என பவனின் ரசிகர்களும், தொண்டர்களும் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.