Pawan Kalyan About Vijayakanth
Pawan Kalyan About Vijayakanth

விஜயகாந்த் தான் ரியல் ஹீரோ என புகழ்ந்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Pawan Kalyan About Vijayakanth : இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த வைரஸிடம் இருந்து மக்களை காக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும் இந்த வைரஸ் எப்படியோ டாக்டர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர் என அனைவருக்கும் பரவி வருகிறது.

என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு தான் அப்படி பேசினேன் – படங்களில் அரசியல் பேசியது குறித்த ரகசியத்தை வெளியிட்ட விஜய்.!

பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க போய் பரிதாபமாக உயிரிழந்தார் நரம்பியல் மருத்துவர் சைமன். இவரை அடக்கம் செய்ய பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை தருகிறேன். அந்த இடத்தில் கொரானாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்து கொள்ளலாம் என கூறினார்.

கேப்டன் விஜயகாந்தின் இந்த அறிவிப்பை பார்த்த பவன் கல்யாண் விஜயகாந்த் தான் ரியல் ஹீரோ என அவரை பாராட்டியுள்ளார்.