Parthipan slams Ayogya team | R. Parthiepan | Venkat Mohan | Sam C. S | Vishal | Vakkantham Vamsi | A. Sreekar Prasad | B. Madhu
Parthipan slams Ayogya team

“என் படத்தை அப்பட்டமாக காப்பியடித்து அதில் என்னையே நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னவொரு அயோக்கியத்தனம்” என பார்த்திபன் கூறியுள்ளார்.

Parthiban slams Ayogya team – வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’.

இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் பல தடைகளைக் கடந்து நேற்று திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்த பலரும் இப்படம் 1993-ம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான உள்ளே வெளியே படத்தை போலவே இருப்பதாக சொல்லினர். இதை தற்போது பார்த்திபனும் கூறியுள்ளார்.

“என் படத்தை அப்பட்டமாக காப்பியடித்து அதில் என்னையே நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னவொரு அயோக்கியத்தனம்” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பார்த்திபன் கூறியுள்ளார்.