
சின்னத்திரையை விட்டு மொத்தமாக வெளியேற உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.
Pandian Stores Kathir in Upcoming Projects : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இவர் தொடர்ந்து வெப் சீரிஸ் தொடர்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். ஏற்கனவே இவர் நடித்திருந்த வதந்தி வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது மாயத் தோட்டா என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் இனி தொடர்ந்து வெற்றி மற்றும் படங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து வேற எந்த சீரியலில் நடிக்கப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் குமரனின் சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.