லக்ஷ்மி அம்மா பிரிவை தாங்க முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் கதறுகிறது.

Pandian Stores Episode Update 15.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். நேற்று லக்ஷ்மி அம்மா மரணமடைந்த நிலையில் அதனை தனம் நம்ப மறுத்து வந்தார். இதனையடுத்து கதிர் தனத்தின் கையைப் பிடித்து ஆறுதல் கூற பின்னர் அவரும் அழத் தொடங்கினார்.

தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ : சுகாதாரத்துறை அறிவிப்பு

லக்ஷ்மி அம்மா பிரிவை தாங்க முடியாமல் கதறும் குடும்பம்.. கண்ணனுக்கு தகவல் போகுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் அப்டேட்.!!

நீங்க இல்லாம எப்படி அத்தை நாங்க இருப்போம்? ரொம்ப கஷ்டமா இருக்கு.. என் குழந்தையை பார்க்க எவ்வளவு ஆசையா இருந்தீங்க. எழுந்திருங்க அத்தை என அழுகிறார். மூர்த்தியின் அம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுகிறார். பின்னர் தனத்தின் அம்மா ஜகாவுக்கு போன் செய்து சம்மந்தி அம்மா தவறி விட்டதாக கூறுகிறார்.

வீட்டில் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து என்னாச்சு ஏதாச்சு என விசாரிக்கின்றனர். எல்லாத்துக்கும் காரணம் கண்ணன் பையன் தான்.. அவன் போனதுக்கு பிறகு படுத்தவங்க தான் எந்திரிக்கவே இல்ல என கூறுகின்றனர்.

கவினின் Lift படத்திற்கு என்ன பிரச்சனை? – Producer Ravindran அறிக்கை!

வீட்டிற்கு வந்த ஜகா அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு உலகின் அப்பா அம்மாவிற்கு போன் செய்து தகவல் கூறுகிறார். அவர்களும் அலறியடித்துக் கொண்டு மூர்த்தியின் வீட்டிற்கு கிளம்புகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

கண்ணன் வேற திருச்சிக்கு சென்றுள்ளான். அவனுக்கு தகவல் போய் சேருமா சேராதா என்பது குறித்து கேள்வியும் எழுந்துள்ளது.