பத்மபூஷன் விருது பெற்ற அஜித்குமார்.. குவியும் வாழ்த்து..!

பத்மபூஷன் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

Padma Bhushan award for Ajith Kumar
Padma Bhushan award for Ajith Kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் உலக அளவில் 300 கோடி வசூலையும் நெருங்கி வருகிறது.

படங்களைத் தாண்டி அஜித்குமார் கார் ரேசிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறது. அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர்களின் லிஸ்ட் அதிகமாகி கொண்டே இருக்கிறதே தவிர இன்னும் யார் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவர் விருது வாங்கியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Padma Bhushan award for Ajith Kumar
Padma Bhushan award for Ajith Kumar