தனது படத்தின் முதல் போஸ்டரை ஒட்டிய ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஹீரோ.!

ஓஹோ எந்தன் பேபி படத்தின் முதல் போஸ்டரை படத்தின் ஹீரோ ஒட்டியுள்ளார்.

Oho Entan Baby movie hero sticking to the first poster
Oho Entan Baby movie hero sticking to the first poster

இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோவாக ருத்ரா நடித்துள்ளார். மேலும் மிதிலா பால்கர், மிஸ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு ,கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவான ருத்ரா படத்தின் முதல் போஸ்டரை அவரே ஒட்டியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் நடிகர் ருத்ரா விஷ்ணு விஷால் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.