எத்தனை கோடி கொடுத்தாலும் பிக் பாஸ் போகமாட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்.!!

எத்தனை கோடி கொடுத்தாலும் பிக்பாஸுக்கு போக மாட்டேன் என கூறியுள்ளார் பிரபல நடிகை.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இந்தப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
ஏற்கனவே பல வருடங்களாக பிக் பாஸ்க்கு வருமாறு ஆஃபர் வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் நான் தொடர்ந்து நிராகரித்து வருகிறேன் என கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் 1.65 கோடி ரூபாய் கூட கொடுக்க முன் வந்தார்கள் அப்பொழுதும் நான் எத்தனை கோடி கொடுத்தாலும் பிக் பாஸ் போக மாட்டேன் என சொன்னதாகவும் பிறகு என்னை பார்த்தால் ரியாலிட்டி ஷோவுக்காக வேறு ஆண்களுடன் ஒரே படுக்கையில் படுக்கும் பெண் போல தெரிகிறதா என்றும் பேசியதாக கூறியிருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
