nivetha thomas in pink telungu remake
நடிகை நிவேதா தாமஸ் அஜித் பட ரீமேக்கில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார்.

தெலுங்கு மொழிகளில் நாயகியாக மட்டுமே நடித்து வரும் நிவேதா தாமஸ் தற்போது பிங்க் மற்றும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க உள்ளாராம்.

அதுவும் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் ரசிகர்கள் பலரும் நிவேதா தாமஸின் துணிச்சலை பார்த்து வியந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.