இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாகி உள்ள சீரியல் நடிகை நிஷா.
Nisha Ganesh Blessed with Boy Baby : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நிஷா கணேஷ்.
வெள்ளித்திரை நடிகர் ஆன கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்க நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.