NGK heroines expectation regarding new government | Rakul Preet Singh | Sai Pallavi | Suriya | Selvaraghavan | Yuvan Shankar Raja
NGK heroines expectation regarding new government

NGK heroines expectation regarding new government

வரும் புதிய அரசிடம் நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்று கேட்டதற்கு, “தவறு செய்தால் உடனடியாக தண்டனை என்பதை கொண்டுவர வேண்டும்” என்றார் சாய் பல்லவி.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரேமம் 2 படத்தில் சாய் பல்லவி? அவரே சொன்ன தகவல் இதோ!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இவர்களிடம் வரும் புதிய அரசிடம் நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்று கேட்டதற்கு, “தவறு செய்தால் உடனடியாக தண்டனை என்பதை கொண்டுவர வேண்டும்” என்றார் சாய் பல்லவி.

ரகுல் ப்ரீத் சிங்கோ, “சாதி மத வேறுபாடின்றி ஓர் நாடாக இந்தியா இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

YouTube video