கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் என தெரிய வந்துள்ளது.

New Anchor Update in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலங்கள் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கியுள்ளது.

சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் : மத்தியக் குழுவினர் நேரில் பார்வை..

இந்த நிலையில் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாசன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொரானா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பளம் வேணாம் நடிக்கிறேன் சொன்னேன் – Actor Ameer Funny SPeech

இதனால் இந்த வாரம் அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

சுருதிஹாசன் ஏற்கனவே சன் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.