நெல்சன் திலிப் குமார் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப் குமார். கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றிருந்தார்.

தற்போது இவரது இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி வைரலானதை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் அடுத்ததாக இயக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நெல்சன் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.