தனது திரை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாசர். இவரின் இந்த அதிர்ச்சியான முடிவை கேட்ட ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இயக்குனர் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் கே. பாலச்சந்தர். இவரின் இயக்கத்தின் மூலம் உருவாக்கியுள்ள இரண்டு முத்துக்கள் தான் ரஜினி மற்றும் கமல் அவர்கள். இவர்களைப் போலவே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான “கல்யாண அகதிகள்” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தான் நாசர்.

நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நாசர்.. என்ன காரணம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

இதனைத் தொடர்ந்து நாசரின் நடிப்பில் வெளியான தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் போன்ற படங்களினால் தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாகவும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார். மேலும் நடிகர், தயாரிப்பாளர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நடிகர் சங்க தலைவர் போன்று பல முகங்கள் கொண்டுள்ள இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகராக  திகழ்ந்திருக்கிறார்.

நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நாசர்.. என்ன காரணம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

மேலும் ‘பாகுபலி’ படத்தின் மூலம் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் கொடுத்து அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். சினிமாவையும் தாண்டி அரசியலில் நுழைந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியிலும் பணியாற்றி வந்தார். இரண்டாவது முறையாக நடிகர் சங்கம் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் தற்போது சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நாசர்.. என்ன காரணம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

ஏனென்றால் கொரோனா தொற்று காலகட்டத்தில் இதய பாதிப்புகளால் நடிகர் நாசர் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார். அதற்குரிய சிகிச்சைகளை பெற்று வந்த இவர் தற்போது அவரின் உடல் நலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவரின் உடல்நலம் சீராகி அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.