
பாலிவுட்னா சும்மாவா என சொல்லும் அளவிற்கு ஜவான் படத்திற்கு நயன்தாரா பெரிய சம்பளம் வாங்கியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் உருவாக்கிய இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்காக இயக்குனர் அட்லீயே கிட்டத்தட்ட 40 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ள நிலையில் நயன்தாராவின் சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா பாலிவுட் பக்கம் போனதும் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார். ஆமாம் இந்த படத்திற்காக அவர் பதினொரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.
