Nayanthara

Nayanthara :  பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அதுவும் பொது இடங்களில் பெரும்வாரியான படப்பிடிப்பு நடைபெறுவதால் தினம் தினம் படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

இதில் ரஜினி, யோகி பாபு, நயன்தாராவின் கெட்டப் வெளியாவதோடு சில வீடியோக்களும் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

மிஸ்டர் லோக்கல் தள்ளிபோக இந்த படம்தான் காரணமா? வெளிவந்த புதிய தகவல்!

அண்மையில் வெளியான புகைப்படத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சிகள் இருந்தன.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் நயன்தாரா கல்லூரி ஆசிரியராக நடிக்கிறாராம்.

தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!

ஏற்கனவே ஏகன், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் இதே போன்றவொரு ரோலில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.