MR.Local Updates
MR.Local Updates

MR.Local Updates : எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது எதற்காக இப்படம் தள்ளிபோனது என்ற விவரம் கிடைத்துள்ளது.

அதாவது இந்த வாரம் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் இறுதி பாகம் வெளியாவதால் மிஸ்டர் லோக்கல் படத்துக்கு மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் போதுமான காட்சிகள் கிடைக்கவில்லையாம்.

மேலும் அவெஞ்சர்ஸ் அலையில் மிஸ்டர் லோக்கல் காணாமல் போகவும் வாய்ப்பிருப்பதால் தற்போது இந்த முடிவை படக்குழு எடுத்திருக்கிறார்களாம்.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.