Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

டீசர விடுங்க.. சூர்யா ரசிகர்களுக்கு காப்பான் ஸ்பெஷல் அப்டேட் இதோ!

இந்நிலையில் இப்படத்தில் மொத்தம் 15 நாயகிகள் நடிப்பதாக தற்போது ஓர் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் விஜய் பயிற்சியளிக்கும் கால்பந்தாட்ட அணியில் இடம்பெறும் 11 பேரும் நாயகிகளாம்.

இதில் இந்துஜா, வர்ஷா, ரெபா மோனிகா ஜான், ஆத்மிகா, ரோபோ ஷங்கரின் மகள் ஆகியோரது பெயர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் மற்ற நடிகைகளின் பெயர்கள் படம் வெளிவரும்போதுதான் தெரியுமாம்.

மேலும் இப்படத்தில் நாயகியாக நயன்தாராவும் விஜய்யின் அக்காவாக தேவதர்ஷினியும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.