Web Ad 2

சிம்பு பிறந்த நாளான நாளை, நயன்தாராவின் “டெஸ்ட்”

Web Ads

நேரடியா விஷயத்திற்கு வருவோம்.. ‘டெஸ்ட்’ என்பது கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்.

அதாவது, நாற்பது வயதிலும் கட்டுடல் கலையாமல் மெருகேற்றி வரும் நயன்தாரா கைவசம் தற்போது 6 படங்கள் உள்ளன.

மேலும், பான் இந்தியா திரைப்படமாக கீத்து மோகன் தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் யாஷின் அக்காவாக நடிக்கிறார் நயன்.

இதுதவிர, சசிகாந்த் இயக்கத்தில் ‘டெஸ்ட்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாவில் (நாளை) பிப்ரவரி 3-ந் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நெட்பிளிக்ஸில் அடுத்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் திருமண ஆவணப்படம் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், மீண்டும் நெட்பிளிக்ஸில் என்ன அறிவிப்பை வெளியிடப்போகிறார். நாளை 3-ந் தேதி முன்னாள் காதலர் சிம்புவின் பிறந்த நாளில், அது என்ன அறிவிப்பாக இருக்கும்? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதாவது, நயன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது. அந்த ‘அரண்மனை ரகசியத்தை’ நயன்தாரா தனது இன்ஸ்டா பதிவில் மறைபொருளில் குறிப்பிட்டிருக்கிறார்.

nayanthara reveals exciting announcement on simbu birthday
nayanthara reveals exciting announcement on simbu birthday