Natpe Thunai Movie Review

Natpe Thunai Review : சுந்தர். சி-யின் தயாரிப்பில் டி.பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, அனகா, கரு பழனியப்பன், ஆர்.ஜே விக்னேஷ் மற்றும் பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் நட்பே துணை.

படத்தின் கதைக்களம் :

பாண்டிச்சேரியில் உள்ள அரங்கநாதன் விளையாட்டு அரங்கத்தை அரசியல் வாதிகளில் பிடிகளில் இருந்து மீட்டெடுக்கும் போராட்டமே நட்பே துணை.

ரோடு சைடு ரோமியாவாக ஹிப் ஹாப் ஆதி ஜாலியாக சுற்றி கொண்டு பிரான்சிற்கு செல்வதற்காக வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக தன்னுடைய மாமான பாண்டிராஜ் வீட்டிற்கு செல்கிறார்.

அந்த ஊரில் உள்ள அரங்கநாதன் விளையாட்டு மைதானத்தில் ஹரிஷ் உத்தமன் ஹாக்கி கோச்சராக பயிற்சி கொடுத்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் இந்த பயிற்சி மையத்தில் இருந்து 4 பேராவது தேர்வாகி விடுவார்கள்.

கடலும் ஆறும் சேரும் பகுதியில் இந்த அரங்கம் அமைந்திருப்பதால் வெளிநாட்டவரை சேர்ந்தவர்கள் இந்த அரங்கத்தை கைப்பற்ற திட்டமிடுகின்றனர்.

அதற்கு உடந்தையாக விளையாட்டு துறை அமைச்சராக நடித்துள்ள கரு. பழனியப்பனும் உடந்தையாக செயல்படுகிறார்.

இந்த திட்டத்தை முறியடிக்க ஒரே வழி பிரான்சு அணியுடன் அரங்கநாதன் அணி மோதி வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

அந்த நேரத்தில் தான் ஹிப் ஹாப் ஆதி ஒரு இன்டர்நேஷனல் ஹாக்கி வீரர் என்பது தெரிய வருகிறது.

அதன் பின்னர் ஹிப் ஹாப் ஆதி இந்த அரங்கத்திற்காக விளையாடுகிறார். இந்த விளையாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது? ஹிப் ஹாப் ஆதியின் அணி அரங்கத்தை மீட்டெடுத்ததா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

ஹிப் ஹாப் ஆதி, கரு பழனியப்பன், ஆர்.ஜே விக்னேஷ் ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக அமைந்துள்ளது. மற்ற நடிகர்களான பிஜிலி ரமேஷ், எரும சாணி விஜய் என அனைவரும் அவர்களின் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்துள்ளனர்.

கதாநாயாகியாக நடித்துள்ள அனகா பேருக்கு படத்தில் இருக்கிறாரே தவிர அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.

இசை :

ஹிப் ஹாப் ஆதியின் மியூசிக்கும் பாடல்களும் பின்னி பெடலெடுத்துள்ளன. சிங்கிள் பசங்க நாங்க சிங்கிள் பசங்க மற்றும் சில பாடல்கள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

அரவிந் சிங் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறப்பாகவே செய்து கொடுத்துள்ளார். குறிப்பாக கிளைமேக்சில் நடக்கும் ஹாக்கி மேட்ச்சை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

எடிட்டிங் :

ஃபென்னி ஆலிவர் (Fenny Oliver ) இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த ஒரு சில இடங்களில் கத்தரி போட்டு படத்தின் நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி அவரது பணியும் சிறப்பு.

இயக்கம் :

படத்தின் இயக்குனர் முதல் பாதியில் ஒரு சில இடங்களில் கொஞ்சம் போராக கொண்டு சென்றிருந்தாலும் இரண்டாம் பாதியில் சரியான கோட்டில் படத்தை கொண்டு சென்றுள்ளார்.

கிளைமேக்ஸ் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கொண்டு சென்றுள்ளார். கூடவே ஆங்காங்கே சிந்திக்க வைக்கும் வகையில் அரசியல் வசனங்களை சேர்த்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

ஹிப் ஹாப் ஆதி, கரு பழனியப்பன் ஆகியோரின் நடிப்பு
அரசியல் வசனங்கள்
கிளைமேக்ஸ் காட்சி

தம்ப்ஸ் டவுன் :

படத்தின் நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் .
வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here