Namma Veettu Pillai First Look : Sivakarthikeyan, Pandiraj, Anu Emmanuel, Aishwarya rajesh, D.imman, Rk.Suresh, Namma Veettu Pillai

Namma Veettu Pillai First Look :

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 16 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் SK16 படத்த்தில் நடித்து வருகிறார்.

பிகில் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா? தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட ஆதாரம்.!

சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்திற்கு டி.இம்மான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.