‘தண்டேல்’ பட வெற்றிக்கான காரணம் குறித்து நாகார்ஜுனா பேச்சு
ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணம் என்ன? எதுவாக இருப்பினும் அதற்கு முழு பொறுப்பேற்பது யாராக இருக்கவேண்டும் எனில், இயக்குனர் தான். சரி, இருக்கட்டும். இது தொடர்பாக ஒரு நிகழ்வு பார்ப்போம்..
சோபிதாவை திருமணம் செய்த பின்னர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, ‘தனது மகன் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் என் மருமகள் சோபிதா துலிபாலா வந்த நேரம் என்றும் சொல்லலாம்’ என பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சோபிதாவின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில், புரமோஷனுக்கு சென்றபோது நாக சைதன்யா, ‘சோபிதாவின் சொந்த ஊர் என்பதை அழுத்தம் திருத்துமாக குறிப்பிட்டு, “விசாகப்பட்டினம் மக்கள் தன்னை கைவிட மாட்டார்கள்” என தெரிவித்திருந்தார்.
தண்டேல்; ‘பாகிஸ்தான் போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளும் மீனவரான நாக சைதன்யாவை மீட்க சாய்பல்லவி நடத்தும் போராட்டம் தான் இந்த படம். காதல் காட்சிகள் மற்றும் உணவுப்பூர்வமான காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், 50 கோடி வசூலை இன்றுடன் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நாகார்ஜுனா மூத்த மருமகள் சமந்தா இருக்கும்போது அவருக்கு சப்போர்ட்டாக பேசி வந்தார். பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியையே இவர் நடத்த வரமுடியவில்லை என்றால், சமந்தாவே சென்று சில ஷோக்களை நடத்தியுள்ளார்.
பின்னர், சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நாகார்ஜுனா 2-வதாக சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், ‘தண்டேல்’ படத்தின் வெற்றிக்கு இயக்குநர், தயாரிப்பாளர், என் மகன் நாகசைதன்யா, சாய் பல்லவி எல்லாம் எப்படி ஒரு காரணமோ அதேபோல என் மருமகள் சோபிதா வந்த நேரமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது’ என நாகார்ஜுனா கூறியுள்ளார்.
தற்போது சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.