Naga Chaitanya and Samantha : Naga Chaitanya comes to Hyderabad for Samantha , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

படப்பிடிப்பு இடைவெளியில் ஒரு சின்ன கேப் கிடைத்ததும் தனது மனைவி சமந்தாவை பார்ப்பதற்காக தற்போது நாக சைதன்யா ஆந்திரா திரும்பியுள்ளாராம்.

Naga Chaitanya and Samantha :

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

ஒரு நாளுக்கு 25 லட்சம் கொடுத்தா வரேன், பிக் பாஸ் டீமை திணற விட்ட காமெடி நடிகர்.!

இதைத் தொடர்ந்து சமந்தா ஓ பேபி படத்திலும் நாக சைதன்யா வெங்கி மாமா படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்கள்.

இதில் வெங்கி மாமா படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இதன் படப்பிடிப்பு இடைவெளியில் ஒரு சின்ன கேப் கிடைத்ததும் தனது மனைவி சமந்தாவை பார்ப்பதற்காக தற்போது நாக சைதன்யா ஆந்திரா திரும்பியுள்ளாராம்.

ஒரு சின்ன பிரேக் தான் என்றாலும் தனது மனைவியை பார்ப்பதற்காக அவர் ஓடோடி வந்தது அவர்களுக்குள் இருக்கும் காதலை உணர்த்துவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.