‘கூலி’ படத்தில் எனது கதாபாத்திரம்: ஸ்ருதிஹாசன் அப்டேட்ஸ்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில், ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தனது கதாபாத்திரம் குறித்து தெரிவிக்கையில், ‘ரஜினி சார் எப்போதுமே ரொம்ப கூலாக இருப்பார். அவர் எவ்வளவு பெரிய வெற்றிகளை கண்டுவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சவுகரியமாக மாற்றும் வழி அவரிடம் இருக்கிறது.

படத்தில், சத்யராஜ் சாருடைய மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க ஆண்களை மையப்படுத்திய கதையாக இருந்தாலும், அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுவார்கள். அப்படியான ஒரு கதையாக இப்படம் அமைந்திருக்கிறது.

இதில், நாகார்ஜுனா சார் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பே அருமையாக இருக்கும். எப்போதுமே அவருக்கு ரசிகையாக இருந்துள்ளேன். இப்போது அவரது சூப்பர் ரசிகையாக மாறியிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் உபேந்திரா, அமீர்கான், சவுபின் சாகீர் உள்பட பலர் நடத்துள்ளனர். அனிருத் இசையில் 3 சிங்கிள் ஸாங் வெளியாகி தற்போது டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

my character in coolie movie shruti haasan narrates
my character in coolie movie shruti haasan narrates