பணத்துக்காக அனிருத் இசையமைக்கிறார்: தமன் ஓபன் டாக்..

Web Ads

தமிழ்த்திரையில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான ‘3’ என்றஎன்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ரஜினியின் வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கும் கமிட் ஆகி வருகிறார். அவ்வகையில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.

இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைப்பில் ‘வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி’ ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது, அகண்டா 2, தி ராஜா சாப் போன்ற தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தமன் தமிழ்-தெலுங்கு சினிமா குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை.

பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். ஆனால், அவர்கள் தெலுங்கு படங்களில் வேலை செய்வது விருப்பத்தால் அல்ல பணத்திற்காகதான்’ என தமன் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அனிருத் விளக்கம் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

music composer thaman expresses his distress
music composer thaman expresses his distress