துப்பாக்கி படத்தின் கதையை உருவாக்கும் வேலையில் முருகதாஸ் இறங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Murugadoss Decision on Thuppaki 2 : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனையடுத்து தளபதி விஜய்யை வைத்து கத்தி மற்றும் சர்க்கார் என இரண்டு படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களின் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதிலும் குறிப்பாக சர்க்கார் பட கதை விவகாரம் நீதிமன்றம் வரை செய்து முருகதாஸ் பெயரை மிகவும் டேமேஜ் செய்தது.
இருப்பினும் தளபதி விஜய் மீண்டும் இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்கு கிடைத்தது. ஆனால் முருகதாஸ் கூறிய கதை விஜய்க்கு திருப்திகரமாக இல்லாததால் தன்னுடைய அடுத்த படத்துக்கான கால்சீட்டை நெல்சன் திலிப் குமார் அவர்களுக்கு கொடுத்து விட்டார்.
இதனால் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கில் ஒரு படத்தை இயக்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாக கதையை தயார் செய்யும் வேலையில் இறங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த படத்தின் கதை விஜய்க்கு மட்டும் பொருந்தாமல் கமலுக்கும் பொருந்தும் வகையில் அவர் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் துப்பாக்கி 2 படத்தில் விஜய்க்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..! | HD
துப்பாக்கி படத்தின் கதை நிலவரம் என்ன? ஹீரோவாக நடிக்கப் போவது யார்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.