பன்முக திறமைசாலி ஹுசைனி.. பவன் கல்யாண் இரங்கல்..!

உடல் நலக்குறைவால் மறைந்த பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனிக்கு பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Multi-talented Hussaini Pawan Kalyan condoles

Multi-talented Hussaini Pawan Kalyan condoles

விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. அதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் 22 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பவன் கல்யாண் அவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்..

அதில் ஹுசைனின் பயிற்சியின் கீழ் சுமார் 3000 பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர் இது மட்டும் இல்லாமல் TAAT இல் முக்கியமான பொறுப்புகளை வகித்தார். அவர் ஒரு பன்முக திறமைசாலி இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார் நல்ல ஒரு ஓவியச் சிற்பி.. இளைஞர்களுக்கு தற்காப்பு கலைகளை இன்னும் எளிதாக கிடைக்கச் செய்ய விரும்பினார் அவரின் மரணத்திற்குப் பிறகு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது மனநிலையை வெளிப்படுத்தியது என்று கூறி அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

Multi-talented Hussaini Pawan Kalyan condoles

Multi-talented Hussaini Pawan Kalyan condoles