Mugen Rao in Latest Photo

தளபதி விஜய் கொடுத்த அதே போஸில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் முகேன் ராவ்.

Mugen Rao in Latest Photo : தமிழ் இயக்குநர் விஜய் டிவியின் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ். மலேசிய தமிழரான இவர் பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் பாடிய சத்தியமா சொல்லுறேன் டி என்ற பாடல் மிக பெரிய வெற்றி பெற்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் முகேன் ராவ். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் துப்பாக்கி படத்தில் தளபதி விஜய் கொடுத்த அதே போஸில் முகேன் ராவ் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.