Web Ads

நந்தினி வீட்டில் இருப்பதை அறியும் சூர்யா.. சுந்தரவல்லி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 30-11-25
moondru mudichu serial today promo update 30-11-25

நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் லிஸ்ட் போட்டு என்னென்ன வேண்டும் என்பதை சொல்லிவிட்டு இதெல்லாம் செஞ்சு வச்சுட்டு எங்களை கூப்பிடு என சொல்லிவிட்டு சென்றுவிட நந்தினியும் சமைக்கப் செல்கிறார். கல்யாணம் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வர இருவரும் சேர்ந்து சமைக்க ஆரம்பிக்கின்றனர். கல்யாணம் நந்தினி இடம் உடம்பு புல்லா விஷம் இருக்கிறவங்களால மட்டும்தான் இப்படி பண்ண முடியும் ஆனா இவங்களுக்கு நீ சமைச்சு கிட்டு இருக்க எப்படின்னு தெரியல என்று சொல்ல அவங்க எப்படி நான் போகட்டும் விடுங்க என்று சொல்ல கல்யாணம் எலி மருந்து வாங்கி வச்சிருக்க கலந்துடு என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என நந்தினி சொல்லுகிறார். நான் போறதுக்குள்ள அவர ஒரு வாட்டி பார்த்துவிட்டால் போதும் என்று சொல்ல உன்னோட நல்ல மனசுக்கு கண்டிப்பா நடக்கும் என சொல்லுகிறார். சமைத்துக் கொண்டிருக்கும் போது நந்தினி அவரது பையை கவனித்து விட்டு அதில் இருக்கும் கருப்பன் போட்டோவை எடுத்துக் கொண்டு பூஜை ரூமில் வைத்து கருப்பன் அறிவாளில் எலுமிச்சம் பழத்தை சொருகி சூர்யா சாரை பார்க்க வேண்டும் என்று கண்ணை மூடி மனமுருகி வேண்டிக் கொள்கிறார்.

மறுபக்கம் சூர்யா நந்தினியை கூப்பிட்டுக் கொண்டிருக்க குடும்பத்தினர் வந்து எதுக்கு கத்துக்கிட்டு இருக்க என்று கேட்கின்றனர் என்கிட்ட இருந்து நந்தினி என்னை பிரிச்சிட்ட இல்ல என்று சூர்யா கோபப்படுகிறார். அப்படியே போனாலும் அவளா போயிருக்க மாட்டா நீங்க தான் அவள அனுப்பி இருப்பீங்க. நீங்க அவளை என்னமோ பண்ணி இருக்கீங்க என்று சொல்லி கோபப்பட்டு பக்கத்தில் இருக்கும் பொருட்களை தூக்கி எரிகிறார். மறுபக்கம் நந்தினியும் மனம் உருகி வேண்டுகிறார். மாதவி சூர்யாவிற்கு சாப்பாடு கொடுக்க அதனை தட்டி விட்டு அனைவரையும் வெளியில் போக சொல்லுகிறார். அப்போது பெட்டில் விழுந்த அசோக அல்வாவை கவனித்து விட்டு இது நந்தினி பண்ணது தானே என்று சொல்ல அவ பண்ணல என்று சொல்லுகிறார். இது அவ பண்ணது தான் என்று சொல்லி கோபப்பட்டு கொண்டிருக்க மறுப்பக்கம் நந்தினி கையில் ரத்தம் வரும் அளவிற்கு வேண்டிக் கொண்டிருக்கிறார். சூர்யாவும் நந்தினி இங்கதான் இருக்கா என்று உறுதியாக சொல்லுகிறார்.

நந்தினி கையில் அறிவாலுடன் பூஜை ரூமில் உட்கார்ந்து நான் சூர்யா சார பாக்கணும் கருப்பா என்று சொல்லிக் கொண்டே கண்ணை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க மறுப்பக்கம் சூர்யா ரூமில் நந்தினி இங்கதான் இருக்கா அவள கூப்பிடுங்க கூப்பிடுங்க என்று சொல்லி கத்தி ஒரு கட்டத்திற்கு மேல் கோபத்தில் உச்சத்திற்கு சென்ற சூர்யா பாட்டில்களை தூக்கி உடைத்து அவர்களை ரூமில் இருந்து துரத்தி அடிக்கிறார் பிறகு சுந்தரவல்லி வெளியில் வந்துவிட்டு இவனை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணுங்க நான் அவளை வீட்டை விட்டு அனுப்பி விடுறேன் என சொல்லி கீழே வந்து பூஜை ரூமில் இருக்கும் நந்தினியை பிடித்து இருக்கிறார் இதனால் நந்தினி கையில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டுகிறது. அதிலும் பாராமல் சுந்தரவல்லி வலுக்கட்டாயமாக நந்தினியை பிடித்து இழுக்க மறுபக்கம் சூரியா நந்தினி நந்தினி என கத்திக்கொண்டு ரூமில் இருந்து வலியுடன் வெளியில் வருகிறார். நான் சூர்யா சாரை பார்க்க வேண்டும் என்று நந்தினி கத்திக்கொண்டே வர கல்யாணம் அந்த புள்ள பாவமா என்று சொல்ல கல்யாணத்தை தள்ளிவிட்டு நந்தினியை இழுக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial today promo update 30-11-25
moondru mudichu serial today promo update 30-11-25