நந்தினி மீது விழுந்த பழி, சுந்தரவள்ளி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 28-01-25
நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி மருதாணி வைத்துவிட அவர் சூப்பர் என்று சொல்லிவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்கிறார். பிறகு நந்தினி அவரது கைகளில் வைத்துக் கொள்கிறார். நந்தினியும் சூர்யாவும் ரொமான்ஸ் பண்ணுவது போல அர்ச்சனா கனவு கண்டு கண் கலங்கி கோபமாகி சூர்யா என்று கத்த அவர்களின் அப்பா அம்மா வந்து என்னாச்சு என்று கேட்கின்றனர். என்னோட சூர்யா கூட அவளோட குளோசா இருக்கா என்று கோபப்பட அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் இருப்பாங்க என்று கேட்க அர்ச்சனாவின் அம்மா கல்யாணம் ஆனவங்க ஒரு ரூம்ல இருக்காங்க தனித்தனியாவா இருப்பாங்க நீ லூசா என்று கேட்க அம்மான்னு கூட பார்க்க மாட்டேன் அவ்வளவுதான் என்று சொல்லிட்டு திட்டிவிட்டு அர்ச்சனா அப்பாவிடம் வந்து உன் சூர்யா உனக்கு கிடைப்பான் நான் சேர்த்து வைப்பேன் என்று சொன்னீர்களே இன்னும் ஏன் எதுவும் பண்ணல என்று கேட்கிறார்.
உடனே அர்ச்சனாவின் அம்மா அவனுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல அவ சொல்றானா நீங்களும் சரின்னு சொல்றீங்க என்று கோபப்பட, மினிஸ்டர் இப்பவும் சொல்றேன் சூர்யா உனக்கு தான் என்று சொல்ல, எப்பப்பா நடக்கும் என்று கேட்க அதற்கு உடனே அர்ச்சனா சூர்யா வீட்டில் எதிரில் இருக்கிற ஒரு வீடை வாங்குங்க நான் சூர்யாவை பார்த்துக்கிட்டே இருக்கணும் நான் சூர்யாவுடன் நினைப்பிலேயே வாழ்ந்திடுவேன் என்று சொல்ல அதுக்கெல்லாம் அவசியமில்லை அம்மா நீ சூர்யா கூட தான் வாழ்வ என்று சொல்ல, மிஸ்டர் மனைவி கோபப்பட்டு சென்று விடுகிறார். உடனே அர்ச்சனா அப்போ எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க என்று சொல்லி மினிஸ்டர் இடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். எங்கிருந்தோ வந்தவ எங்க தூக்கத்தை கெடுத்துக்கிட்டு இருக்கா அவள விரட்டி அடிக்காமல் விடமாட்டேன் என்று மினிஸ்டர் யோசிக்கிறார்.
அர்ச்சனா தூங்கப் போக மீண்டும் தூக்கத்திலும் சூர்யா நந்தினி ரொமான்ஸ் செய்வது போல வர டென்ஷனான அர்ச்சனா, சூர்யாவிற்கு ஃபோன் போட போன் போகாமல் இருக்கிறது உடனே செக் பண்ணி பார்த்தால் அர்ச்சனா நம்பரை பிளாக் பண்ணி இருப்பது தெரிய வருகிறது. இதனால் அர்ச்சனா இன்னும் டென்ஷன் ஆகி ரூமில் இருக்கும் பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்கிறார். உடனே மினிஸ்டர் வந்து எழுப்பி அப்பா சூர்யா என் நம்பரை பிளாக் பண்ணிட்டான் என்று சொல்ல இதெல்லாம் ஒரு விஷயமாமா போய் படு என்று சொல்ல அவன் அதை தான் பண்ணிக்கிட்டு இருக்கான் நீ தான் பைத்தியம் மாதிரி பண்ற என்று சொல்ல அந்த பொம்பளைய வாயை மூட சொல்லு என்று சொல்ல நான் பொம்பளையா நான் உன்னோட அம்மா என்று சொல்லுகிறார். எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம் நீ போய் படுமா என்று சொல்ல மினிஸ்டர் மனைவி அர்ச்சனாவை சமாதானப்படுத்தி ரூமுக்கு அழைத்து செல்கிறார்.
மறுநாள் காலையில் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டே மருதாணி சிவந்திருப்பதை பற்றி பேசிக்கொள்கின்றன. பிறகு சட்னி சூப்பராக இருப்பதாக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி கைய பாருங்க சூப்பரா சிவந்து இருக்கு என்று சொல்கிறார். சரி உட்கார்ந்து சாப்பிடு சட்னி எல்லாம் சூப்பராக இருக்கு என்று சொல்ல சுந்தரவல்லி சாப்பிட உட்கார சொல்ல சூர்யா இறங்கி வருகிறார். நந்தினியை கூப்பிட்டு நீ வச்ச மருதாணி எவ்வளவு சூப்பரா செவந்திருக்கு பாரு நந்தினி என்று சொல்ல சரி முதல்ல சாப்பிடுவாய் என்று அருணாச்சலம் கூப்பிடுகிறார் எனக்கு அதெல்லாம் வேணாம் நான் காண்பிக்க தான் வந்தேன் என்று சொல்ல, அனைவரின் கையில் மருதாணி இருப்பதை பார்த்து அப்போ நந்தினி ஊரிலிருந்து எடுத்துக்கிட்டு வந்த மருதாணியை எல்லாரும் போட்டுக்கிட்டீங்களா சூப்பர் என்று சொல்ல சுந்தரவல்லி எதுக்கு என்கிட்ட பொய் சொன்னீங்க என்று கோபப்படுகிறார். ஊர்ல இருந்து கொண்டுட்டு வந்தேன்னு சொன்னீங்க என்று சொன்ன ஊர்ல இருந்து தான் எடுத்துட்டு வந்து ஆனா நான் எடுத்த வரல நந்தினி எடுத்துட்டு வந்தா என்று சொல்ல எல்லாரும் என் அவமானப்படுத்துறீங்களா என்று சொல்லிவிட்டு கையை தேய்த்து கழுவுகிறார்.
என்ன போக மாட்டேங்குது என்று சொல்லி கல்யாணத்தை கூப்பிட்டு துணி துவைக்கிற சோப் எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார் எதுக்குமா என்று கேட்க, உங்களுக்கு தான் வெட்கம் ,சூடு, சொரணை எதுவும் கிடையாது எனக்கும் அப்படி இல்ல இப்பவே என் கையை கரிக்கிடனும் போல தோணுது என்று சொல்ல உடனே சூர்யா கல்யாணத்திடம் அவங்களுக்கு வாஷிங் பவுடர் எல்லாம் வேணாமா தீப்பந்தம் எடுத்துட்டு வா என்று சொல்ல கோபப்பட்ட சுந்தரவல்லி வாஷிங் சோப்பு போட்டு கையை நன்றாக தேய்கிறார் இதனைப் பார்த்து சூர்யா அருணாச்சலம் என அனைவரும் சைலன்டாக சிரிக்கின்றனர்.பிறகு அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் எதுக்கு இப்போ கையவே பாத்துக்கிட்டு இருக்க என்று சொல்ல, நீங்க பேசாதீங்க எனக்கு ஆகாதுன்னு தெரிஞ்சும் நீங்க எப்படி பண்ணி இருக்கீங்க என்று சொல்ல நீ ஆசையா கேட்டா அதனால தான் என்னால எதுவும் பேச முடியல என்று பேசிக் கொண்டிருக்க கல்யாணம் உங்களைத் தேடி மூன்று பேர் வந்திருக்காங்க என்று சொல்லுகிறார் வர சொல்லு என்று சொல்ல யார் என்று அருணாச்சலம் கேட்கிறார். பிறகு அவர்கள் வந்து உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்லி உங்கள சிறந்த தொழிலதிபரா தேர்வு பண்ணி அவார்டு கொடுக்கலாம்னு இருக்கோம் என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார் அருணாச்சலமும் சுந்தரவல்லிக்கு கங்கிராஜுலேஷன் என்று சொல்ல இந்த பங்க்ஷன் இன்னைக்கு ஈவினிங் உங்க வீட்டிலேயே சிம்பிளா பண்ணலாம்னு இருக்கோம் நீங்க ஒத்துழைச்சா சிறப்பா பண்ணிடலாம் என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.
என்ன ஃபங்ஷன் என்று கேட்க எங்களுடன் லேடிஸ் கிளப்ல இருக்கிறவங்க எல்லாரும் சேர்ந்து அவார்ட் கொடுத்து விட்டு ஒரு சின்ன கேக் கட்டிங் பண்ணிடலாம் என்று சொல்ல சுந்தரவள்ளியும் சம்மதிக்கிறார். அந்த நேரம் பார்த்து சூர்யா வர அவர்கள் சூர்யாவிடம் சிறந்த தொழிலதிபர் என்று உங்க அம்மாவிற்கு அவார்ட் தரோம் என்று சொல்ல, அப்படியான அவங்க சிறந்த தொழிலதிபர் கிடையாது என்று சொல்ல சுந்தரவல்லியின் முகம் மாறுகிறது. சரி சரி நீங்க சொல்லுங்க என்று சொல்ல எங்களோட லேடிஸ் கிளப் மூலமா வருஷா வருஷம் சிறந்த தொழிலதிபருக்கு கொடுப்போம் அதனால் இந்த வருஷம் உங்க அம்மாவிற்கு கொடுக்கப் போகிறோம் என்று சொன்ன இவங்க என்ன பண்ணிட்டாங்கன்னு கொடுக்கப் போறீங்க என்று கேட்கிறார். உடனே அருணாச்சலம் நீ ஏதாவது வேலை இருந்தா போய் பாரு என்று சொல்ல உடனே அவர்கள் உங்க வீட்டில வச்சு உங்க அம்மாவுக்கு ஒரு சின்ன பங்க்ஷன் இருக்கு நீங்களும் கலந்துகோங்க என்று சொல்ல உங்களோட சங்கத்து பேரு என்ன என்று கேட்க பிங்க் பியூட்டிஸ் என்று சொன்னவுடன் சூர்யா சிரித்துக்கொண்டே சென்று விடுகிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க திடீரென ஒரு பொருள் வெடித்து விடுகிறது.உடனே மாதவி என்ன பண்ற என்று கேட்க,நான் எதுவும் பண்ணல அதுவே வெடிச்சிருச்சு என்று சொல்கிறார்.
விஜி அவரது கணவரும் சூர்யாவை சந்தித்து ஒய்ஃப் பிறந்தநாள் வருது சந்தோஷமா இருக்கிறது விட்டுட்டு இப்படி பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அங்கு இருப்பவர்கள் உங்க மருமகனு தான் தெரியாது சாரி மேடம் அப்படின்னு சொல்ல,சாரி எல்லாம் கேட்காதீங்க அவ எங்க வீட்டோட என்று பேசிக் கொண்டிருக்க சூர்யா வந்து விடுகிறார். என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 28-01-25