அர்ச்சனா பற்றி குடும்பத்தினரிடம் சொன்ன நந்தினி, உண்மையை சொல்லும் ரேணுகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 26-07-25
moondru mudichu serial today promo update 26-07-25

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல ஒரு வார்த்தை சொல்லுங்க போலீசை வர வச்சு எல்லாரையும் தூக்கிட்டு போக சொல்றேன்னு சொல்ல அப்படி பண்ண எனக்கு தெரியாதா பிரச்சனை பெருசாகும் மன்னிப்பு கேள் அர்ச்சனா என்று சொல்ல அர்ச்சனாவும் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக சாரி சொல்லுகிறார். சூர்யா தமிழ்ல மன்னிப்பு கேள் என்று சொல்லுகிறார். அர்ச்சனாவும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு கோபமாக சென்று விட, சுந்தரவள்ளியும் சென்று விடுகிறார். பிறகு வேலையாட்கள் அனைவரும் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துவிட்டு வேலை பார்க்க சென்று விடுகின்றனர்.சுந்தரவல்லி அர்ச்சனாவிடம் இதுக்கெல்லாமே நீ கவலைப்படாத எங்க வீட்ல இருக்குற யாருக்கும் உன்னை புடிக்கல ஆனா என் மனசுல நீ தான் என்னோட மருமக நான் முடிவு பண்ணிட்டேன் அதுக்காக நான் எந்த எல்லைக்கும் வேணாலும் போவேன். நீ எதுக்காகவும் கவலைப்படாமல் ஆபீஸ்க்கு வந்து உன்னோட வேலைய பாரு நான் பாத்துக்குறேன் என்று சொல்ல அர்ச்சனாவும் சரி நான் இங்க இருந்து இறங்குகிறேன் என்று சொல்லிவிட்டு அவரது காரில் ஏறி சென்று விடுகிறார்.

சூர்யாவும் நந்தினியும் வீட்டுக்கு வந்து அருணாச்சலத்திடம் நடந்த விஷயங்களை சொல்லுகிறார். நான் செஞ்சதுல ஏதாவது தப்பு இருக்கா டாடி என்று கேட்க எந்த தப்பு இல்லை என அருணாச்சலம் சொல்லுகிறார். அங்க வேலை செய்ற தொழிலாளிகளை பார்க்க வேண்டியது நம்ம கடமை என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி வந்து என்னமோ அர்ச்சனாவை ஜெயிச்ச மாதிரி வந்து பேசிகிட்டு இருக்கான். எதிரியா இருந்தா திறமையோடு மோதணும் என்று சொல்ல, அப்போ அர்ச்சனா பண்ணது சரியா என்று சூர்யா கேட்க அடிச்சது தப்பு தானா இல்லன்னு சொல்லல அதுக்காக நீ மன்னிப்பு கேட்பத சொல்ல அதைத்தான் சொல்றேன்னா என்று சொல்லுகிறார்.

உடனே சுந்தரவல்லி நந்தினியிடம் அவளோட புத்திசாலித்தனத்தோட போராடனும் என்று சொல்ல, சூர்யாவிடம் அர்ச்சனா மாதிரி சேர்ந்தாப்புல நாலு வார்த்தை இங்கிலீஷ்ல பேச சொல்லு என்று சொல்ல, இங்கிலீஷ் என்றது வெறும் மொழி மட்டும்தான் என சூர்யா சொல்லுகிறார். முதல்ல நாளைக்கு அவ மீட்டிங் கொடுப்பா அந்த மீட்டிங்ல உன் திறமையை காட்டு என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி போக முதல்ல மீட்டிங் நடந்தால் தானே என்று சூர்யா சொல்லுகிறார். மறுபக்கம் அர்ச்சனா சூர்யா நடந்து கொண்ட விஷயத்தில் டென்ஷன் ஆகி என்ன பண்ணுவது என தெரியாமல் யோசித்து ரேணுகாவிற்கு ஃபோன் போடுகிறார். நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்க உங்க அறிவு என்ன அழகு என்ன என்று பேச ஆரம்பிக்க நந்தினி பாத்திரம் எடுக்க பின்னால் வர இவர் பேசுவதை கவனிக்கிறார்.

உங்களை அந்த வேலைக்காரி நந்தினி உங்கள் அசிங்கப்படுத்துனதை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு கோபம் வந்தது என்று சொல்ல நீங்க என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க மீதியெல்லாம் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். சூர்யாவும் நந்தினியும் ஒரு வாரத்துக்கு ஆபீஸ் பக்கமே வரக்கூடாது என்று சொல்ல அதற்கு ரேணுகா இந்த வீட்டை கெடுத்து குட்டிசுவராக்குறதுக்கு தானே நீங்க என்ன இங்க அனுப்பி இருக்கீங்க நான் பாத்துக்குறேன் என்ன இங்க எல்லாரும் நம்புறாங்க நீங்க என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க என்று சொல்ல சரி நான் யோசிச்சிட்டு பண்றேன் என சொல்லி போனை வைக்க நந்தினி இதை எல்லாம் கேட்டு விடுகிறார்.

ரேணுகா பால் காய்ச்சி கொண்டிருக்க நந்தினி வந்தவுடன் பால் குடிக்கிறீங்களா என்று கேட்க வேண்டாம் என நந்தினி சொல்லிவிட்டு அப்போ இவ அர்ச்சனா அனுப்புன ஆள் தானா அப்ப அவங்களும் கெட்டவங்களா இந்த குடும்பத்தை எதுக்கு பழி வாங்கணும் என்று யோசிக்கிறார். அக்கா அக்கா என்று நேர்ல இப்படி பேசிட்டு அர்ச்சனா அம்மா கிட்ட மாத்தி பேசுறாலே என்று நினைக்கிறார். உடனே ரேணுகா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் திட்ட மாட்டீங்களே என்று சொல்லிவிட்டு கேட்க கேளு என்று நந்தினியும் சொல்லுகிறார்.

அந்த அர்ச்சனா யாருக்கா அவங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு அவங்களுக்கு எதுக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுக்கனும் என்று அர்ச்சனாவை திட்டுவது போல பேசுகிறார் நியாயமா பார்த்தா சூர்யா சாரோட பொண்டாட்டி நீங்க உட்கார வேண்டிய இடம் விட்டுக் கொடுக்காதீங்க உங்க குணத்துல கால் தூசி கூட அந்த அர்ச்சனா இல்லை என்று சொல்ல நந்தினி அமைதியாக கேட்கிறார்.

எப்பவுமே நான் இது மாதிரி பேசினா அமைதியா இருக்க சொல்லி கண்டிப்பீங்க இப்ப எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க என்று சொல்ல எனக்கு தலை வலிக்குது நான் போறேன் நீ வேலைய பாரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி ரூமுக்கு வந்து கருப்பசாமி இடம் இத்தனை நாளா அர்ச்சனம்மாவை நல்லவங்க நினைச்ச, ஆனா அவங்க படுமோசமான கெட்டவங்களா இருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த குடும்பத்தை என்ன பண்ணுவாங்களோன்னு பயமா இருக்கு இப்ப நான் என்ன செய்யணும்னு எனக்கு தெரியல என்று சொல்லுகிறார். இதை சொல்லாமல் என்னால் வேடிக்கை பார்த்தால் இந்த குற்ற உணர்ச்சி என்னை கொன்னுடும் இதை சூரியா சார்கிட்ட சொல்லிடலாமா வேணாமா நீயே முடிவு சொல்லு என்று சொல்லி சீட்டு எழுதி போடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் ரேணுகா கையில் பாலுடன் வந்து நிற்க நந்தினி அர்ச்சனா அம்மாவிடம் இந்த குடும்பத்தை அடியோடு அழிச்சுடுவேன் நீங்க கவலைப்படாதீங்க என்று சொன்னா, உடனே அர்ச்சனாவை பத்தி எனக்கு தெரியும் இது மாதிரி கீழ்த்தரமான வேலையை செய்ய மாட்டா என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.

அருணாச்சலம் இந்த வீட்டுக்குள் வந்ததிலிருந்து நீ என்னென்ன பண்ணி இருக்க என்று ரேணுகாவிடம் கேட்க எல்லா விஷயத்தையும் ரேணுகா சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 26-07-25
moondru mudichu serial today promo update 26-07-25