
சூர்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் சுந்தரவல்லி வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா சுதாகரை போலீஸ் ஸ்டேஷனில் இழுத்துக் கொண்டு வந்து ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர். உடனே இன்ஸ்பெக்டர் கேஸ்ல இந்த ஆள் பேர் எழுதிட்டு அந்த பொண்ண ரிலீஸ் பண்ணு என்று சொல்லுகிறார் உடனே நந்தினி குடும்பத்தினர் சாமி கும்பிட்டு சந்தோஷப்படுகின்றனர். உடனே போலீஸ் நந்தினியிடம் தப்பான கம்ப்ளைன்ட் ஆனா இவ்வளவு நேரம் இன்னும் உள்ள உட்கார வச்சதுக்கு டிபார்ட்மெண்ட் சார்பா மன்னிப்பு கேட்டுக்குறோமா என்று சொல்லுகிறார். அதே நேரம் இவர் இல்லனா உங்க வாழ்க்கை கேள்விக்குறியா இருந்திருக்கும் என்று சூர்யாவை சொல்லுகின்றனர். இவர்கள் பேசிக் கொண்டிருக்க பிரசிடெண்ட் ஆட்களுடன் வந்து நந்தினியை வெளியே வர சொல்லுகிறார்.
சூர்யா வெளியில் வந்து அவரிடம் உங்க பையன் சாவுக்கு காரணம் நந்தினி கிடையாது என்று வீடியோ ஆதாரத்தை காட்ட பிரசிடெண்ட் சுதாகர் மீது கோபப்படுகிறார். பிரசிடெண்ட் சுதாகரை பார்த்து நீ ஜெயிலுக்கு போனாலும் உன்ன விட மாட்டேன் நீ எங்க போனாலும் என் கையில தான் சாவு என்று மிரட்ட இன்ஸ்பெக்டர் அவர்களை அனுப்பி வைக்கிறார். பிறகு நந்தினி குடும்பத்துடன் வெளியே வர சூர்யாவை பார்த்து சிங்காரம் மற்றும் அம்மாச்சி இருவரும் நன்றி சொல்லுகின்றனர். இப்ப எதுக்கு எல்லாரும் நன்றி சொல்றீங்க என்று சூர்யா கேட்க நீங்க எல்லாரும் வந்து போனதுக்கப்புறம் என்னோட நம்பிக்கையை விட்டுப் போச்சு, நீங்க திரும்பவும் எப்படி ஐயா வந்தீங்க என்று கேட்க, மீது பேர் எல்லாம் சென்னைக்கு பாதி தூரம் போயிட்டாங்க அவங்களுக்கு நான் இங்க வரது தெரியாது சரி நான் அதெல்லாம் அப்புறம் சொல்றேன் உனக்கு ஓகே தானே நந்தினி என்று சொல்லுகிறார். பிறகு சிங்காரம் சரி நீங்க இப்போ கிளம்புங்க மீதியெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் இதுக்கு மேல ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்ல அவர்கள் இருவரும் சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்புகின்றனர். என்ன நடந்தது என்பதை முழுவதும் சுந்தரவல்லிக்கு சொல்லியவுடன் அவர் ஆரத்தி தட்டை தூக்கி வீசிவிட்டு கோபமாக உள்ளே சென்று என்ன பண்ணாலும் வந்துற என்று டென்ஷனாக பேசிக் கொண்டிருக்கிறார்.
கீழே விழுந்த கற்பூரம் தட்டை எடுத்து வைத்து அருணாச்சலம் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்கிறார். மாதவி எதுக்கோ கவலைப்படாத நந்தினி நாங்க பார்த்துக்கிறோம் எந்த பிரச்சனை வந்தாலும் என்று சொல்ல அசோகன் ஆமாம். நாங்க தான் பிரச்சனை பண்ணுவோம் என்று சொல்லுகிறார். ஏன் நந்தினி எதுவும் பேச மாட்டேங்கற என்று சொல்ல அருணாச்சலம் நடந்த பிரச்சனை நினைச்சு கஷ்டமா இருக்கும். எல்லாம் உள்ள போலாம் என்று சொல்லி உள்ளே வருகின்றனர். மாதவியும் சுரேகாவும் சுந்தரவல்லி கோபத்தில் இருப்பதை பார்த்து இதுதான் நம்மளுக்கு கரெக்டான நேரம் அவங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசலாம் வா என்று மாதவி அழைத்துச் செல்கிறார்.
அவ திரும்ப வருவா என்று நான் நினைக்கவே இல்லம்மா நீங்க நேரா போனத பாத்தா அவ திரும்ப வந்திருக்க மாட்டான்னு நினைச்சேன் ஆனா எப்படிமா வந்தா. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அம்மா அவளை நாங்க பண்ற டார்ச்சர் எல்லாம் அவளை இங்க இருந்து ஓட விட்டுருவோம் என்று சொல்லி பேசிக்கொண்டே இருக்க சுந்தரவல்லி எதுவும் பேசாமல் இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டு பேரும் இங்கிருந்து வெளியே போயிடுங்க என்று அதட்ட இருவரும் பதறி ஓடுகின்றன.
உனக்கு அறிவு இல்லையா சுரேகா, நீ எதுக்கு சூர்யாவை தனியா அனுப்புங்க நம்ம நந்தினியை டார்ச்சர் பண்ணி அனுப்பிடலாம்னு சொல்ற அப்படியே நடந்தா என்ன பண்ணுவ என்று சொல்ல அதெல்லாம் சூர்யா விடமாட்டான்கா என்று சொல்லிவிட்டு மாதவியை அழைத்து சென்று விடுகிறார். பிறகு அருணாச்சலம் சூர்யாவை வந்து பார்த்து உட்கார்ந்து நடந்த விஷயத்தை பற்றி கேட்க நந்தினி தங்கச்சி கையில் போனை கொடுத்து வீடியோ எடுக்க சொன்னேன் அதை பார்த்து தான் கண்டுபிடிச்சேன் என்று பேசிக் கொண்டிருக்கிற நந்தினி வருகிறார். நல்ல காலம்மா இவ்வளவு பிரச்சினையாகும் போது நான் பயந்துட்டேன் ஏதோ நல்லவேளை சுமுகமா முடிஞ்சிடுச்சு என்று சொல்ல நந்தினி நான் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கலையா என்று பேசிக் கொண்டிருக்க,உங்க எல்லாரையும் ஊருக்கு போக சொன்னதுக்கு ஒரே காரணமும் என் மனசுல இருந்தது ஒன்னு தான் முழுக்க முழுக்க இது எங்க குடும்பத்தோட பிரச்சனை அதனால தான் அப்படி சொன்னேன் என்று பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் உங்க குடும்பத்தையும் உன்னையும் ஸ்டேஷன்ல தனியா விட்டுட்டு போகும்போது குற்ற உணர்ச்சியா இருந்துச்சு ஆனால் நாங்க வெளியே வந்து முன்ஜாமின் எடுக்கறத பத்தி எல்லாம் பிளான் போட்டு இருந்தோம் நல்ல வேலை சூர்யா காப்பாற்றி விட்டான் என்று சொல்ல கரெக்டுதான் ஐயா சூர்யா சாருக்கு தான் நன்றி சொல்லணும் என்று சொல்லுகிறார். நீ என்னடா சொல்ற என்று சூர்யா சுதாகர் தாய்க்குலம் என்று யோசித்து சரி நீங்க பேசுங்க டாடி நான் போறேன் என்று சென்று விடுகிறார்.
பிறகு நந்தினி இடம் இப்பதான் பழைய சூர்யாவை பார்க்கிறேன் அவளுக்கு புடிச்சவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா முதல்ல அவங்கள காப்பாத்திட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பான். எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று சொல்ல ஆனால் என் மனசுக்குள்ள பயம் மட்டும் தான்யா இருக்கு அம்மாச்சி, அப்பா எல்லாரும் அந்த ஊர்ல தான் இருக்காங்க அவங்க ஏதாவது பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கு என்று சொல்ல நீ யோசிக்கிற அளவுக்கு நான் யோசிக்க மாட்டேனா நம்ம சொந்தக்காரர் கிட்ட எல்லாம் சொல்லி உங்க குடும்பத்தை பார்க்க சொல்லி இருக்கேன் பயப்படாத பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார்.
நீ போய் உன் கையால ஸ்வீட் பண்ணி எல்லாருக்கும் கொடு என்று சொல்ல நந்தினி கிச்சனில் வந்து கேசரி செய்கிறார். கிச்சனுக்கு வந்த கல்யாணம் வாசனை மூக்க தொலைக்குது இன்னைக்கு என்ன விசேஷம் என்று சொல்ல அருணாச்சலம் ஐயா நேத்தே செய்ய சொன்னாரு அதனால இன்னைக்கு காலையிலேயே செஞ்சிட்டேன் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து காலிங் பெல் நடக்கும் சத்தம் கேட்க கல்யாணம் நான் போய் பார்க்கிறேன் என்று சொல்ல விஜி வந்து இருக்காங்க அம்மா என்று சொல்ல நந்தினி சந்தோஷமாக வந்து விஜியிடம் நானே வரலாம்னு நினைச்சேன் அக்கா என்று பேசிக் கொண்டிருக்கிறார். இது மட்டுமில்லாமல் உன்கிட்ட திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தியா என்று கேட்க நீங்க வேற அக்கா போன இடத்தில் ஸ்டேஷனுக்கு ஒரே பிரச்சனை ஆகி வரத்துக்குள்ளேயுமே ஒரு வழி ஆயிடுச்சு என்று சொல்ல கல்யாணம் கேட்கிற நமக்கே பதருதுமா கொஞ்சம் இல்லன்னா கொலை கேஸ்ல உள்ள தூக்கி போட்டுருப்பாங்க என்று சொல்ல என்ன ஆச்சு நந்தினி என்று விஜி அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சுந்தரவல்லியை கூப்பிடச் சொல்ல, மாதவி எதுக்கு என்று கேட்கிறார்.
விஜி நந்தினியிடம் சூர்யா அண்ணனோட இன்னும் க்ளோசா பழகி பாரு அவரோட இன்னொரு முகம் உனக்கு பிடிக்கும் என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி எனக்கு அதெல்லாம் வேணாம் இதுவே போதும் என்று சொல்லிவிடுகிறார்.
சூர்யா சுந்தரவல்லியிடம் ஊர்ல நடந்த அவ்வளவு பிரச்சனைக்கி காரணம் சுதாகரா இல்லை இவங்களா என்று கேட்க சுந்தரவல்லி அதிர்ச்சி அடைகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
