
லோகேஷ் இயக்கும் ‘கைதி-2’ படக்கதை என்ன? ஹீரோயின் யார்?: இதோ விவரம்..
லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘கைதி-2’ திரைப்பட தகவல்கள் பற்றி இங்கே பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கைதி 2-ம் பாகத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தின் முதல் பாகம், கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தற்போது, சுமார் 6 ஆண்டுகள் கழித்து அதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது.
கைதி படத்தின் தனித்துவமே, அதன் திரைக்கதை வடிவமைப்பு தான். ஹீரோயின் மற்றும் பாடல் இல்லாமல், நைட் எஃபெக்டில் பயணிக்கும் மூவி. ஒரே காஸ்ட்டியூமில் கார்த்தி படம் முழுவதும் வந்து அலட்டிக் கொள்ளாமல் மிரட்டியிருப்பார்.
க்ளைமாக்ஸில் கார்த்தி, ” நான் ஜெயிலுக்கு போறதுக்கு முன்னால என்ன செஞ்சேனு யாருக்கும் தெரியாதே” என்கிற வசனம் பேசியபடி நடந்து செல்வார்.
அவர் சிறை செல்லும் முன் என்னவாக இருந்தார்? என்பதை மையக் கருவாக வைத்து ‘கைதி-2’ உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
முதல் பாகத்தில், கார்த்தியின் மகளை மட்டும் காட்டியிருப்பார்கள். தற்போது 2-ம் பாகத்தில், கார்த்தி சிறை செல்வதற்கு முன் மனைவியுடன் வாழ்ந்த காட்சிகளும் இடம்பெற உள்ளது. அதனால் ஜோடியுடன் கைதி 2-பாகத்தை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
அவ்வகையில், மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கார்த்திக்கு ஜோடியாக ‘சர்தார்’ படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
