Pushpa 2

‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் ஆபிஸில் தொடர் ரெய்டு: ரூ.200 கோடி ஆவணங்கள் பறிமுதல்..

சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு வசம் நடைபெற்ற வருமானவரி சோதனை விவரம் வருமாறு:

தளபதி விஜய் நடித்த வாரிசு, ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் பல தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்தவர் தில் ராஜு.

இவரது அலுவலகம், வீடு மற்றும் ‘புஷ்பா -2’ தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் மேங்கோ மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கொண்டாப்பூர் உள்ளிட்ட இடங்களில் 55 குழுவினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் காலை முதல், இரவு வரை நடந்த சோதனையில் தில் ராஜுவிடமிருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.200 கோடிக்கும் மேல் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணி முதல் அவரது வீடு, அலுவலகம், அவர் படங்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவி வரும் மேங்கோ மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் தீவிர சோதனை நடத்தினர். இன்றும் தொடரும் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, ‘புஷ்பா 2’ இயக்குநர் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

producer dil raju s house raided for second day by it
producer dil raju s house raided for second day by it