மாதவி சதியில் சிக்கிய அசோகன், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்க நந்தினி எழுந்து சூர்யாவின் சட்டையை எடுத்துக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்து படுத்துக்கொண்டு சூர்யாவிடம் நெருக்கமாக இருப்பது போல கற்பனை செய்து பார்க்கிறார். உடனே சட்டையை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கி விடுகிறார். மறுபக்கம் மாதவி கோபமாக இருக்க,சுரேகா வந்து என்னாச்சு என்று கேட்கிறார். அவ என்ன ஹாஸ்பிடல் அடிச்சதிலிருந்து என் மனசு பத்தி எரியுது அவள ஏதாவது பண்ணி ஆகணும் அவ கை கால் மண்ட ஏதாவது உடைந்து படுக்கணும் ஏதாவது செய்யணும் என்று சொல்ல சுரேகா நான் ஒரு ஐடியாவை தரேன் என்று சொல்லுகிறார். உடனே மாதவியும் இந்த ஐடியா சூப்பர் வொர்க் அவுட் ஆகும் கண்டிப்பா செஞ்சுடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
மறுநாள் காலையில் மாதவி வெளியில் வந்து பால் பாக்கெட்டை எடுத்து பார்த்து சுரேகா சொன்னதை யோசிக்கிறார். அப்போது சுரேகா அவளுக்கு பச்சை பால் குடிக்கிற பழக்கம் இருக்கு அதனால நீ வெள்ளை கலர் நெயில் பாலிஷ் பால்ல கலந்து வச்சுடு அதை குடிச்சு அவ ஒரு பத்து நாளைக்கு வாந்தி பேதில படுத்து கிட்டு இருப்பா என்று சொல்லியதை நினைத்து விட்டு மாதவியும் பாலில் நெயில் பாலிஷ் கலந்து கிச்சனில் வந்து வைத்து விடுகிறார். தூங்கி எழுந்த சூர்யா நந்தினி சட்டையை கட்டிப்பிடித்து இருப்பது பார்த்து என் சட்டை எப்படி இங்க வந்துச்சு நான் அங்க தானே மாட்டி வெச்சிருந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்க நந்தினி முழித்துக் கொள்கிறார். என்ன சார் சீக்கிரமா எழுந்துட்டீங்களா என்று கேட்க, நீதான் என்ன சரக்கு அடிக்க விட மாட்டேங்கறியே அதனாலதான் சீக்கிரமா எழுந்துட்டேன் என்று சொல்லுகிறார். சரி என்னோட சட்டை எப்படி இங்க வந்துச்சு என்று கேட்க நந்தினி என்ன சொல்வது என முழிக்கிறார்.
உடனே எனக்கு நைட்டு குளிர மாதிரி இருந்தது அதனால ஏதோ ஒரு துணி எடுத்தா அதுல உங்க சட்ட வந்திருச்சு போல என்று சொல்லி சமாளித்து விட சரி எனக்கு ஒரு காபி எடுத்துட்டு வா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கிச்சனுக்கு வந்த நந்தினி பால் பாக்கெட்டை எடுத்து கட் பண்ண போக அசோகன் வந்து எனக்கு இந்த பால் பாக்கெட் வேண்டும் என்று சொல்லி எடுத்துக்கொண்டு நீ போய் வேற ஒரு பால் பாக்கெட் வாங்கிக்கோ என சொல்லி அனுப்பி விடுகிறார். தூங்கிக் கொண்டிருந்த கல்யாணத்தை எழுப்பி இந்தப் பாலை சுண்ட காய வச்சு எனக்கு எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார். எதுக்கு என்று கேட்க இந்த பால சுண்ட காய வச்சு வெறும் வயித்துல 48 நாள் குடிச்சா சீக்கிரமா குழந்தை பிறந்த ஒரு வீடியோல பார்த்தேன் அதுக்காக தான் சொல்றேன் நீ போய் காசி எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் மாதவி ரூமில் சுரேகாவிடம் எல்லாமே பக்காவா கலந்தாச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படி அலறல் சத்தம் கேட்கப் போகுது பாரு என்று சொல்லி சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார். எனக்கு இன்னொரு விஷயம் தோணுது அவ ஹாஸ்பிடல்ல இருந்தா இந்த சூர்யா வேற அவளை ரொம்ப கொஞ்சி தாங்குமா அதை வர பாக்கணும் என்று சொல்ல அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல இவளுக்கு ஏதாவது நடக்கட்டும் என்று சொல்லுகிறார். இதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அவளை ஏதாவது டார்ச்சர் பண்ணா கண்டிப்பா இங்கிருந்து தலத்தறிக்க ஓடிடுவா என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி நந்தினிக்காக போட்ட திட்டத்தில் அசோகன் சிக்கி விடுகிறார் இதனால் வீடு கலவரம் ஆகிறது இது மட்டும் இல்லாமல் சூர்யா அசோகனை கலாய்த்து அல்ல மறுபக்கம் சுந்தரவல்லி நந்தினியை வேலைக்காரிக்காக இப்படி பேசுறியா என்று திட்ட அவ ஒன்னும் வேலைக்காரி கிடையாது இந்த வீட்டோட மருமக என்று சூர்யா சொல்லுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
