Web Ads

சூர்யா கொடுத்த ஷாக், நந்தினி எடுக்க முடிவு? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ad 2

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 18-11-25
moondru mudichu serial today promo update 18-11-25

நேற்றைய எபிசோடில் இதைக் கீழே கட்டி தொங்கவிட்டால் சூர்யா சார் கவனிப்பாரு என்று சொல்ல, அவர் கவனிக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் மத்தவங்க கவனிச்சிட்டா என்ன பண்றது என்று கேட்க, அவங்க என்ன இன்னும் ரெண்டு சேர்த்து திட்டுவாங்க அவ்வளவு தானே பரவால்ல சூர்யா சார் எனக்கு கூப்பிட்டு கத்திக்கிட்டு இருக்காரு அதுக்காக நான் என்ன வேணா தாங்கிப்பேன் என்று சொல்லுகிறார். உடனே இவர்கள் கட்டிவிட்டு கீழே இறங்கி வந்து விடுகின்றனர். சூர்யா ரூமுக்கு வந்த மூவரும் சாப்பாடு கொடுக்க சூர்யாவை எழுப்ப நான் ரொம்ப இரிடேடிங்கா இருக்க நீங்க எல்லாம் போங்க என்று சொல்ல மாதவி மீண்டும் சாப்பிட சொல்லுகிறார். நான் சாப்பிடனுமா நந்தினி கூப்பிடுங்க என்று சொல்ல மாதவி சுரேகா கோபப்படுகின்றனர்.

அசோகன் ஊட்டி விட தூக்கி தட்டி விட்டு இந்த உலகமே சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் என்று சொல்ல நீ நம்ப வேண்டாம் மாத்திரையை போட்டு தூங்கு கனவுலயாவது வரட்டும் என்று சொல்லி மாத்திரையை கொடுக்க சூர்யா மாத்திரையை சாப்பிட்டுவிட்டு தூங்க இவர்கள் ரூமை விட்டு சென்று விடுகின்றனர். விஜி விவேகிடம் உங்க பிரண்டுக்கு அடிபட்டு இருக்கு எப்படி இருக்குன்னு போன் பண்ணி கேட்டீங்களா என்று கேட்க போன் ரிங் போகுது எடுக்கல என்று சொல்ல நந்தினி கிட்ட கேக்க வேண்டியது தானே என்று கேட்க அவளும் வருத்தப்பட்டுக்கிட்டு தான் என்று சொல்ல, அப்படியே இருந்தாலும் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு விஜி நந்தினிக்கு போன் போடுகிறார். நந்தினியின் போன் சுவிட்ச் ஆஃபில் இருப்பதால் விஜிக்கு சந்தேகம் வந்து நேரில் போய் பார்த்து விட வேண்டும் என கிளம்பி வருகின்றனர்.

விஜி வீட்டுக்கு வருவதை பார்த்த நந்தினி வெளியில் ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுகிறார். உடனே கல்யாணமும் வந்து எதுக்குமா அழுதுகிட்டு இருக்க விடு என்று சொல்ல என்ன பிரச்சனை என விஜி கேட்க சுந்தரவல்லி நடந்து கொண்ட விஷயத்தை சொல்ல புருஷன் பொண்டாட்டி பார்க்கக்கூடாது பேசக்கூடாதுன்னு எப்படி சொல்லுவாங்க என்று கேட்கிறார். அவங்கள மீறி என்னால போய் பார்க்க முடியல என்று சொல்லி அழ, கல்யாணம் எல்லாரும் பிளான் பண்ணி இந்த புள்ளையை வெளிய அனுப்ப முயற்சி பண்றாங்க என்று சொல்ல, நந்தினி எல்லாத்தையும் மீறி சூர்யா சார் நந்தினி இங்கதான் இருக்கா அவள கூப்பிடுங்கனு சொல்லும்போது என்னோட ஈரக்குலையே நடுங்குது அவர ஒரு முறையாவது பார்க்கணும் சரி நாங்க முயற்சி பண்ணி பேசி பார்க்கிறோம் என்று உள்ளே வருகின்றனர்.

இவர்கள் வந்து பார்க்க இப்ப எதுக்கு வந்தீங்க என்று கேட்கின்றனர். சூர்யாவை பார்க்க வந்தோம் என்று சொல்லி விவேக் மேலே போக முயற்சி செய்ய, உனக்கு நான் பர்மிஷன் கொடுக்கலையே என சுந்தரவல்லி சொல்ல, நான் அவன பாக்க வர்றது வழக்கம்தானே என்று சொல்ல அவன் சரியான அதுக்கப்புறம் நீ டெய்லியும் கூடவா இப்ப போ என சொல்லுகிறார். ஓரமா நின்னு கூட பாக்குறோம் என்று சொல்ல கோபப்பட்ட சுந்தரவல்லி யாரும் பாக்க கூடாது என்று கட்டாயப்படுத்தி சொல்லிவிட விஜி எதுக்கு இப்போ சூர்யா அண்ணாவை பார்க்க கூடாதுன்னு இப்படி கோபப்பட்டு பேசுறீங்க ரெண்டு நிமிஷம் பார்க்கிறதுல என்ன ஆகிட போது ப்ளீஸ்மா என்று சொல்ல, அவன நல்லபடியா பார்த்துக்கறதுக்கு கூடப்பிறந்த அக்கா தங்கச்சி இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க என்று சொல்லுகிறார்.

அதற்கு உடனே விஜி எனக்கு உரிமை இல்ல தான் ஆனா கட்டின பொண்டாட்டியை எதுக்கு பாக்க விடாம பண்ணி இருக்கீங்க அவள ஏன் விட மாட்டேங்கறீங்க அவ பாத்துக்குறதுக்கு என்ன பிரச்சனை இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேள்வி கேட்க, உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு சத்தம் போட்டு விஜியை திட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் குடும்பத்தினர் சூர்யாவிடம் சாப்பிட வேண்டும் என்று சொல்ல நான் சாப்பிட வேண்டும் என்று நிஜமா நீங்க நினைச்சீங்கன்னா நந்தினி கூப்பிடுங்க என்று சொல்லுகிறார் உடனே கருப்பன் போட்டோ முன் வந்து நின்ற சுந்தரவல்லி அவன் ஞாபகமாய் இந்த வீட்டில் எதுவுமே இருக்க கூடாது அவன் எந்திரிச்சு வந்து இதை தானே பாப்பா ஏற்கனவே நந்தினி நந்தினி என்று சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்ல அசோகன் அதை எல்லாம் எடுத்து விடுகிறார் பிறகு வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்த நந்தினி கல்யாணத்திடம் இன்னிக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை இன்னைக்கு நைட்டுக்குள் சூர்யா சார் எப்படியாவது பார்த்தே ஆகணும் என்று முடிவெடுக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 18-11-25
moondru mudichu serial today promo update 18-11-25