நந்தினி சொன்ன வார்த்தை, மாதவி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அர்ச்சனா கல்யாண ஆல்பத்தை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பிவிட இந்த கருமத்தை ஏமா வாங்கின இத பாக்க பாக்க டென்ஷன் தான் ஆகும் என்று சொல்லியும் கேட்காமல் அர்ச்சனா ஆல்பத்தை எடுத்து சென்று விடுகிறார். பிறகு பெட்ரூமில் சரக்கு ஊற்றி குறித்துக் கொண்டே ஆல்பத்தை பார்க்கிறார். ஆல்பத்தை பார்த்து கடுப்பான அர்ச்சனா சூர்யாவிற்கு ஃபோன் போட்டு என் கூட சந்தோஷமா இருந்துட்டு அந்த வேலைக்காரி கழுத்துல எப்படி தாலி கட்டின தெரியாம கட்டிட்டேன்னு நீ ஒரு வார்த்தை மட்டும் சொல்லு என்று சொல்ல சூர்யா எனக்கு தெரிஞ்சே தான் கட்டண என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். மீண்டும் சூர்யாவிற்கு ஃபோன் போட்டுக் கொண்டே இருக்க சூர்யா போனை ஆப் செய்கிறார்.
அர்ச்சனா டென்ஷன் ஆகி ரூமில் இருக்கும் பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்க அவர்களின் அம்மா அப்பா வந்து சமாதானம் செய்கின்றனர். உடனே மினிஸ்டர் மனைவி இதுக்கு தான் அந்த கருமத்தை வாங்க வேண்டாம்னு சொன்ன கேட்டியா என்று கத்த உடனே அர்ச்சனா அந்த ஆல்பத்தை பார்த்து இதில் உங்களுக்கு என்னப்பா தெரியுது இதுல அவன் கண்ண பாருங்க அவன் காதல் தெரியுது இல்ல என்று அடுத்த அடுத்த போட்டோவை காட்டி பதட்டப்படுகிறார்.
உடனே மினிஸ்டர் மனைவி அவனுக்கு கல்யாணம் ஆகி மாச கணக்குல ஆகிருக்கு ஒரு பொண்ணு கூட வாழ்ந்து கிட்டு இருக்கா நீ இப்படி கஷ்டப்படுறதுனா அவனுக்கு தெரிய போகுதா என்று மினிஸ்டர்ன்னு கேட்கிறார் உடனே அர்ச்சனா எல்லாத்துக்கும் ஐ நோ ஐ நோ என்று ஒரே பதிலை சொல்லுகிறார். மினிஸ்டரும் மனைவியும் மாறி மாறி பேசும் எதற்கும் சரியாக பதில் சொல்லாமல் எல்லாத்துக்கும் ஐ நோ என்று சொல்ல சரியாக கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகட்டும் வா நம்ம போகலாம் என்று சொல்லி ரூமில் இருந்து கிளம்பி விடுகின்றனர் பிறகு கோபம் கோபமாக அர்ச்சனா கல்யாணம் ஆக ஆல்பத்தை திருப்பி திருப்பி பார்த்து சூர்யா நந்தினிக்கு தாலி கட்டிய புகைபடத்தை மட்டும் கிழிக்கிறார்.
சூர்யா நண்பனிடம் நந்தினியை கோவிலுக்கு வரச் சொல்லு என்று சொல்ல எதற்காக என்றும் கேட்டும் சொல்லாமல் நான் சொல்றத மட்டும் செய் என்று சொல்ல உடனே அவர் விஜிக்கு ஃபோன் போட்டு நந்தினியை கோவிலுக்கு அழைத்து வரச் சொல்லுகிறார். முக்கியமா நீயே கூட்டிட்டு வர மாதிரி கூட்டிட்டு வா என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். பிறகு இருவரும் கோவிலுக்கு கிளம்புகின்றனர். விஜி நந்தினிக்கு போன் போட்டு கோவிலுக்கு போகலாம் என்று கூப்பிட நந்தினி யோசித்து விட்டு போகலாம் என்று சொல்லுகிறார் சரி ரெடியா இரு போகலாம் என்று ஃபோனை வைக்கிறார்.
அருணாச்சலம் கல்யாணத்தை கூப்பிட்டு என்ன காலைல இருந்து வீட்ல தான் இருக்கியா என்ன பிரச்சனை என்று கேட்க, சின்னையாவோட கல்யாண பத்திரிக்கை வந்ததுனால கோபப்பட்டு அம்மா கிழிச்சு போட்டாங்க அந்த நேரம் சின்னையா வந்துட்டாரு என்று சொல்லுகிறார். சரி நீ போய் காபி போடு என்று அவரை அனுப்பி வைத்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்க,நந்தினி அருணாச்சலத்திடம் விஜி அக்கா கூட கோவிலுக்குப் போக பர்மிஷன் கேட்கிறார். அவரும் சரி பத்திரமா போயிட்டு வாங்க என அனுப்பி வைக்கிறார். பிறகு இருவரும் ஆட்டோவில் கோவிலுக்கு வருகின்றனர்.
இருவரும் ஆட்டோவில் பேசிக்கொண்டு போக வேறு ஏதாவது புடவை கட்டிக்கிட்டு வந்து இருக்கலாம் இல்ல நந்தினி என்று சொல்ல ஏன் கா இந்த புடவை நல்லா இல்லையா என்று கேட்க நல்லா இருக்கு கோயிலுக்கு போறோம் இல்ல அதான் கொஞ்சம் கிராண்டா கட்டி இருக்கலாம்னு கேட்டேன் என்று சொல்லுகிறார். என்கிட்ட இருக்கிறதே இது மாதிரி ஒரு நாலு புடவை அவ்வளவுதான் என்று சொல்ல நான் தான் சூர்யா அண்ணா கிட்ட அன்னைக்கு சொன்னேன்னு எடுத்து குடுக்க சொல்லி என்று சொல்ல எடுத்துக் கொடுத்தார் அதனால் அவங்க அக்கா தங்கச்சிக்கு கொடுத்துட்டேன் என்று சொல்லுகிறார் ஏன் என்று கேட்க எனக்கு இப்படி எல்லாம் கட்ட பிடிக்காதுக்கா என்று சொல்லுகிறார். பிறகு கோவிலுக்கு வந்து இறங்கி பூ வாங்கி இருவரும் மாத்தி மாத்தி பூ வைத்துக்கொள்கின்றனர். பிறகு உள்ளே வர சூர்யா நண்பருடன் காத்துக் கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் விஜியுடன் கோவிலுக்கு வர அங்கு சூர்யாவும் நண்பரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு நால்வரும் மாலையும் கழுத்துமாக நிற்க நான் சூர்யா சார் கூட வீட்டுக்கு போக மாட்டான் பிரச்சனை தான் வருது என்று சொல்லுகிறார் நந்தினி.
வீட்டுக்கு வந்த நந்தினி மாதவியிடம் இன்னைக்கு விஜி அக்காவுக்கு கல்யாண நாள் அதனால கோவிலுக்கு போயிட்டு வந்தோம் என்று சொல்ல விஜிக்கு இன்னைக்கு கல்யாண நாள் கிடையாது என்று மாதவி சொல்லுகிறார். உடனே நந்தினி விஜிக்கு போன் போட்டு இன்னைக்கு உங்க கல்யாண நாள் இல்லையாமே அக்கா என்று கேட்க ஆமாம் நந்தினி என்று விஜியும் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.